Show all

அமர்நாத் யாத்திரை நிலச்சரிவு, கனமழையால் பாதிப்பு

அமர்நாத் குகைக் கோயில் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்கின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரை கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதுவரை 9 குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ளன.

நேற்று 10வது குழுவாக 2,422 பக்தர்கள் யாத்திரை புறப்பட்டனர்.இதற்கிடையே தற்போது ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பக்தர்களின் 68 வாகனங்கள் உட்பட 2,000 வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.