Show all

வங்கதேசத்தில் நெரிசலில் சிக்கி 25 பேர் சாவு

வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் உள்ள ஷமீம் தாலுக்தெர் என்ற தொழிலதிபர், ரமலான் மாதத்தையொட்டி ஏழை எளியவர்களுக்கு இலவச பரிசுப் பொருள்கள், ஆடைகளை வழங்குவதாக வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

அதையடுத்து, அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது இல்லத்தின் முன்பு சுமார் 1,500 பேர் கூடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 23 பெண்கள், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் மைமென்சிங் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த அனைவரும் பெண்கள், குழந்தைகள் எனவும் காயமடைந்தவர்களில் பலரது உடல் நிலை மோசமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலவசப் பொருள்களை வாங்க வந்திருந்தவர்களை ஒழுங்குபடுத்த, அவர்கள் மீது ஷமீம் தாலுக்தெரின் பணியாளர்கள் தடியடி நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஷமீம் தாலுக்தெர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.