Show all

மாணவர்களுக்கு ரூ 1 .68 கோடி பரிசுத்தொகை அமைச்சர்கள் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா, கடந்த 26 ந்தேதி தலைமைச் செயலகத்தில் தமிழை முதல் மொழிப் பாடமாகக் கொண்டு பயின்று 2014-2015ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 21 மாணவ மாணவிகளுக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதை தொடர்ந்து நேற்று பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற 26 மாணவ மாணவியருக்கும், மூன்றாம் இடம் பெற்ற 23 மாணவ மாணவியருக்கும் மற்றும் 10ம் வகுப்பில் தமிழை முதல் மொழிப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுதி மாநில அளவில் முதல் இடம் பெற்ற 51 மாணவ மாணவியருக்கும் இரண்டாம் இடம் பெற்ற 194 மாணவ மாணவியருக்கும் மூன்றாம் இடம் பெற்ற 694 மாணவ மாணவியர் உட்பட 988 மாணவ மாணவியருக்கு ரூ1 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர்கள் எடப்பாடி மு. பழனிசாமி, . வளர்மதி அ .சுப்பிரமணியன், . வீரமணி, .அப்துல் ரகீம் ஆகியோர் வழங்கினர் .

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.