Show all

ஆகஸ்ட் 7 ம் நாளை தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு

ஆகஸ்ட் 7ம் தேதியை, தேசிய கைத்தறி நாளாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாளில், நாட்டின் மிகச் சிறந்த கைத்தறி ரகங்களை, உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் கண்காட்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய, கைத்தறித்துறை அமைச்சர், சந்தோஷ் காங்வார் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆகஸ்ட் 7, 1905ம் ஆண்டில், வெள்ளையர்களுக்கு எதிராக, சுதேசி இயக்க அறிவிப்பை, நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், கோல்கட்டா நகரில் வெளியிட்டனர். அதை நினைவு கூரும் விதத்தில், இனிமேல், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 7ம் தேதி, கைத்தறி நாளாகக் கொண்டாடப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.