Show all

கிரீஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை கெடு - ஐரோப்பிய மண்டலம்

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான கிரீஸ், பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நெருக்கடியிலிருந்து கிரீûஸ மீட்பதற்காக ஐரோப்பிய யூனியன் நிபந்தனைகளுடன் கூடிய நிதியுதவிகளை அளித்து வந்தது.

சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற கிரீஸýக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு அளிப்பதாக உறுதியளித்த தொகையின் ஒரு பகுதியை ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைத்தது. இதனால், கெடுவுக்குள் பன்னாட்டு நிதியத்தின் கடன் தவணையை கிரீஸால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், கடன் வழங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று நிகழ்த்தப்பட்ட வாக்கெடுப்பில், கடன் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என பெருவாரியான கிரீஸ் மக்கள் வாக்களித்தனர்.

இதையடுத்து, யூரோவை பொது நாணயமாகப் பயன்படுத்தும் ஐரோப்பிய மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.