Show all

நாசா வீடியோவால் குழப்பம்

பூமியிலிருந்து பறவைகளா!பறக்கும்தட்டுகளா!என ஐயுறும் வண்ணம் சில பொருட்கள் வான் நோக்கி எழும்புவது போன்ற வீடியோ காட்சி யுடியூப் வெப்தளத்தில்கடந்த ஒரு கிழமையாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படக்காட்சியை பல லட்சம் பேர் பார்த்து வியந்து போயுள்ளனர்.

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவெளியிட்டதாகக்கூறப்படும் இந்த வீடியோவில் எந்த விளக்கமும் இல்லை. ஆனால் நாசா என்னவோ வாய் திறக்கவேயில்லை.

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்-இதுபோன்ற படக்காட்சிகள் வெளியாவது முதல் முறையல்ல இது போன்ற பரபரப்பு படக்காட்சிகளை வெளியிட்டுகுழப்பத்தை உருவாக்குவது சிலரின் வாடிக்கை இதை வைத்து குழம்ப வேண்டியதில்லை என்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.