Show all

நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செல்பேசியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

 

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்க முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

 

பதவியேற்பு விழாவில் நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, நாட்டுப்பண் இசைக்கப்படும் போது செல்பேசியில் பேசுவது போன்று காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதில் நாட்டுப்பண் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கும் பரூக் அப்துல்லா, செல்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.