Show all

மாணவமாணவிகள் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது

தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது உள்ளன. ஒரே ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி சென்னையில் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்களுக்கு 2 கட்ட மாக கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசு அறிவித்தப்படி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.

புதிய வகுப்பிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்குச் சில கட்டுப்பாடுகளை மருத்துவ கல்வி இயக்ககம் விதித்துள்ளது. மாணவமாணவிகள் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது. மாணவிகள் லெகின்ஸ் அணி யக்கூடாது. மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து, ஷூ அணிந்து வர வேண்டும்.

ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து வருபவர்களுக்கு அனுமதியில்லை. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். தலை முடியை விரித்து விட்டபடி வராமல் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு வர வேண்டும்.

மருத்துவப் படிப்புக்கு வருவோர் கண்ணியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிர ‘ராக்கிங்’ போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ‘ராக்கிங்’ செய்து பிடிபட்டால் கல்லூரியை விட்டு நீக்கப் படுவார்கள் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.