Show all

தமிழ்நாட்டில் அமையவிருக்கும் பொலிவுறு நகரங்கள் குறித்த திட்ட வரைவு

தமிழகத்தில் அமையவிருக்கும் 12 பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்த திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு நடுவண்அரசிடம் இன்று சமர்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் 98 பொலிவுறு நகரங்களை அமைப்பதற்கு நடுவண்அரசு முடிவு செய்தது. தங்கள் மாநிலங்களில் அமையவிருக்கும் பொலிவுறு நகரங்கள் குறித்த வரைவு அறிக்கையை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள நடுவண்அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

டிசம்பர் மாதம் ஏற்பட்ட வௌ;ளப் பாதிப்பையடுத்து, வரைவு திட்டத்தை அளிப்பதற்கான கால கெடுவை நீட்டிக்க தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அமையவிருக்கும் பொலிவுறு நகரங்கள் குறித்த திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு இன்று நடுவண்அரசிடம் அறிவித்தது.

இதன்படி, தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் பொலிவுறு நகரங்களாக மாற்றப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.