Show all

சீமானுக்கு அழைப்பாணை! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ விசாரணை ஆணையம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 15ஆம் கட்ட விசாரணைக்கு அணியமாக 19 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் நாளை அணியமாக விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

நாளது 08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120 (22.05.2018) அன்று தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் நடத்திய பேரணியின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 15ஆம் கட்ட விசாரணைக்கு அணியமாக 19 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் நாளை அணியமாக விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,306.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.