Show all

2.0 வசூல் என்னமோ எதிர்பார்த்தபடிதான்! ஆனால் கஜா புயல் பாதிப்புக்குள்ளான பகுதியினர்களால் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியவில்லை

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் 2.0. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பெரும் பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் வசூல், அனைவரும் எதிர்ப்பார்த்தாகும். அந்த வகையில் தற்போது 2.0 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கணிப்பின் படி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் முதல் நாள் ரூ.100 கோடி வசூலிக்கும் என்றும் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் ரூ.30 கோடி வரையில் வசூல் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தின் கணினி மயமான உரிமை ரூ.60 கோடிக்கும், வட மாநில உரிமை ரூ.80 கோடிக்கும், ஆந்திரா, தெலுங்கானா உரிமை ரூ.70 கோடிக்கும், கர்நாடகா உரிமை ரூ.25 கோடிக்கும், கேரளா உரிமை ரூ.15 கோடிக்கும் விற்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வழக்கமான  பெரிய வரவேற்பு இருக்கவில்லை.

இணையத்தில் வழக்கம் போல, தமிழ்ராக்கர்சின் திரையரங்கப் பதிப்பு மட்டும் வெளியானது. ஆனால் வீம்புக்கு வெளியிட்டது போல தரமில்லாமல், படம் ஒரு திரையரங்கிலும், பேச்சு ஒரு திரையரங்கிலும் எடுக்கப் பட்டது போல தொகுப்பு செய்யப் பட்டிருந்ததாக சொல்லப் படுகிறது. இது முப்பரிமாண படம் என்பதால், தமிழ்ராக்கர்ஸ் மூலமான வெளியீடு மக்களால் விரும்பப் படமாட்டாது என்றும் சொல்லப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,986.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.