Show all

வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடல்! 1வழக்கு 2சதுப்பு நிலத்தில் சாம்பல் 3நடுவண் அரசு அனுமதி காலம் முடிவு

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அருகே இயங்கி வந்த வல்லூர் அனல்மின் நிலையம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வந்தது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதில் மொத்தம் மூன்று அலகுகள் இருந்தன. 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் என 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு இது இயங்கி வந்தது. தமிழகத்தின் மின் தேவையின் ஒரு பகுதியை இது நிறைவு செய்து வந்தது. 

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் இந்த வல்லூர் அனல்மின் நிலையத்திற்கு எதிராக சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த அனல்மின் நிலையம் தனது சாம்பல் கழிவுகளை சதுப்பு நில பகுதிகளில் கொட்டுவதாக தெரிவித்தார். இதனால் மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார். 

கடந்த சில கிழமைகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வல்லூர் அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பில் வல்லூர் அனல்மின் நிலையம் சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வந்தது. இதற்கு அவர்கள் அனுமதி வாங்கவில்லை. நடுவண் அரசின் விதிகளை மீறி சாம்பலை கொட்டி வந்துள்ளனர். வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு நடுவண் அரசு அளித்த அனுமதி ஏழு மாதங்களுக்கு முன்பே  முடிவடைந்து விட்டது. இதனால் இந்த நிலையத்தை மூட வேண்டும் என்று என்று தெரிவித்துள்ளது. சென்னை உயர்அறங்கூற்றுமன்ற உத்தரவை அடுத்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொஞ்சம் மின்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.