Show all

உங்கள் வீட்டில் உள்ள அரசு தொலைக்காட்சிப் பெட்டியை கணினிபோல மாற்றிப் பயன்பெறலாம்! குறைந்த விலையில் கருவிகள்

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மிடுக்குத் தொலைக்காட்சிகள் சந்தைக்கு வந்துவிட்ட நிலையில்- தற்;போது சாதாரண தொலைக்காட்சியாகவுள்ள உங்கள் அரசு தொலைக்காட்சியையும் கணினி போன்ற மிடுக்கு தொலைக்காட்சியாகப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் நடைமுறைக்கு வந்து விட்டது.

தமிழக அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டியைக் கூட இனி மிடுக்கு தொலைக்காட்சியாக மாற்றி பயன்பெறலாம். இதற்கு ஒரே ஒரு கருவியை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் என்ற கருவியைப் பயன்படுத்தி, உங்களது சாதாரண தொலைக்காட்சியை கணினி போன்ற மிடுக்கு தொலைக்காட்சியாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்தக் கருவியைப் பயன்படுத்திய தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட ஒட்டு மொத்த இணைய உலகையும் நம் வீட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம். சுருக்கமாக கூற வேண்டுமென்றால், இதில் வைஃபை, இணையம், காணொளி விளையாட்டு, வலையொலி என பல்வேறு சிறப்பம்சங்கள் உண்டு. 

அமேசான், பிளிப்கார்ட் என இயங்கலையிலும் ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் கிடைக்கிறது. க்யூப்டெக், லிங்க் ஆன், அம்லாஜிக், மெஸ்மோ என பல்வேறு தயாரிப்புகளில் அதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விலைக்கு ஏற்றவாறு கிடைக்கிறது. 

இணையம் மூலம் பாடல்கள், படங்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விலை, 2,400 ரூபாயிலிருந்து, 8 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.