Show all

ஆண்டிப்பட்டியில் நேற்றைய துப்பாக்கிச்சூடு! பாதுகாப்புக்காக நடத்தப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி விளக்கம்

திமுக, தொடர்ந்து அமமுகவினர் மீதான பறக்கும் படையினர் நடவடிக்கை! அதிமுக கூட்டணிக் கட்சியினர், பாஜக, பாமக, தேமுதிக, அதிமுகவினர் மீதும் நடவடிக்கை தொடருமா? இல்லை அவர்கள் எல்லாம் நியாயவான்களா? அல்லது நியாயவான்களாக கற்பிக்கும் முயற்சியா? பறக்கும் படையின் கட்டுபாடு தேர்தல் ஆணையத்திடமா? இல்லை நடுவண் காபந்து, தமிழக ஆளும் கட்சியினர் வசமா? இப்படி ஆயிரம் கேள்விகளோடு நொந்து நிற்கின்றனர் பொதுமக்கள்.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேனி, ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் சோதனை செய்ய காவல்துறையினர் முயன்றதாகவும், காவல்துறையினரை  தொண்டர்கள் தடுக்க முயன்றதாகவும் அதற்காக காவல்துறையினர்  4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக தகவல் வந்தது. பணம் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை அங்கிருந்த சிலர் தடுக்க முயற்சி செய்தனர். இதனால் தற்காப்புக்காகவே வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமமுகதேர்தல் அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அமமுகவினர் 4 பேரை காவல்துறையினர் விசாரணைக்கு என்று பிடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன், திமுக சார்பில் மகாராஜன், அமமுக சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். இந்தச் சம்பவம் ஆண்டிபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,125.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.