Show all

ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள்

சுவாதி கொலை சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த வௌ;ளிக்கிழமை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.

 

இந்நிலையில் சுவாதி மரணம் குறித்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் நேற்றைய தினம் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

 

கொலை செய்யப்பட்ட சுவாதி ஒரு பிராமணப் பெண் என்பதால் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை எனவும், இதுவே ஸ்வாதி ஒரு தலித்தாக இருந்திருந்தால் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு பேசியிருப்பார்கள் எனவும் அந்த முகநூல் பதிவில் கூறப்பட்டு உள்ளது.

 

இந்த கருத்து ஜாதி மோதல்களை உருவாக்கும் என்று கூறி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த விவகாரத்தில் நான் விளக்கம் அளிக்க கடமைப் பட்டிருக்கிறேன். அந்த முகநூல் பதிவு நான் எழுதியது அல்ல. யாரோ எழுதியது. நான் பகிர்ந்திருந்தேன்.

 

ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு இதை சொல்ல எனக்கு உரிமை உண்டு என்றார் ஒய்.ஜி.மகேந்திரன்.

 

மேலும்,

ராமதாஸ், கௌரவக் கொலை போன்ற சம்பவங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துப் போராடுகிறார். அவர்கள், ஸ்வாதி கொலையில் இன்னும் அழுத்தத்துடன் போராடியிருக்க வேண்டும்

என்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.