Show all

தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கண்டனப் பேரணி

வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்தை எதிர்த்து, சென்னையில் திங்கள்கிழமை வழக்கறிஞர்கள்; பேரணி நடத்தினர்.

 

சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மாதம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தது. இந்தத் திருத்தத்தில்,

மது அருந்திவிட்டு நீதிமன்றத்துக்கு வருவது, நீதிபதி பெயர், அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் பெறுவது, நீதிபதி, நீதித்துறை அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் பேசுவது, மற்றும்

நீதிபதிகள் குறித்து பொய்யான, ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகளை கூறுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களை

அவர்களது தொழிலில் இருந்து நிரந்தரமாகவோ அல்லது தாற்காலிகமாகவோ நீக்குவதற்கு உயர்நீதிமன்றம்,

மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய திருத்தத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய திருத்தத்தில்  சில அம்சங்கள் வழக்கறிஞர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர்களுக்கு எதிரான திருத்தத்தைத் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் பங்கேற்ற கண்டன பேரணி திங்கள்கிழமை  நடைபெற்றது. சென்னையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அலுவலகம் முதல் சேப்பாக்கம் வரை நடைபெற்ற பேரணியில், மாநிலம் முழுவதிலும் இருந்து 135-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

 

ஊர்வலத்தில் பங்கேற்ற அனைத்து வழக்கறிஞர்கள்;, புதிய திருத்தம் ஒரு தலைப்பட்சம், ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கோஷங்கள் எழுப்பியவாறே சென்றனர்.

 

வழக்கறிஞர்கள் ஒரு சிலர் மனுநீதி சோழன் போல வேடம் அணிந்து, இரட்டை குதிரை சாரட் வண்டியில் அமர்ந்தவாறு பேரணியில் பங்கேற்க வந்தனர். இதன் பின்னர், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அமைக்கப்பட்ட மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை வழக்கறிஞர்கள்; சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் பேசும்போது, வழக்கறிஞர்கள் தொழிலை பாதிக்கும், அவர்களது உரிமையை பறிக்கும் வகையிலும் புதிய திருத்தம் உள்ளது.

அனைத்து திருத்தங்களும் ஏற்கதக்கது அல்ல. ஆகையால், அவற்றை உடனே திரும்பப் பெற வேண்டும்.

இந்த விவகாரத்தில், வழக்கறிஞர்கள் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு, திருத்தங்கள் இடம் பெற வேண்டும். இதுதொடர்பாக, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களை அழைத்து பேச வேண்டும். வழக்கறிஞர்கள்; சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என்றார் அவர்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகே பேரணி தொடர்பாக ஒட்டப்பட்ட சுவரெட்டி, பதாகைகளை காவல்துறையினர் அங்கிருந்து அகற்றினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.