Show all

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் திட்ட அறிமுகம்

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இத்திட்டம் திங்களன்று (பிப்.15) முதல் 29-ந்தேதி வரை 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்காளர் விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர்பட்டியலில் உள்ள தவறுகளைக் களைதல், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

 

18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் படாமலிருந்து, தற்போது புதியதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் படிவம் 6-லும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-லும், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் திருத்தம் முதலியவற்றினை மேற்கொள்ள விரும்புபவர்கள் படிவம் 8-லும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு மாறுதல் செய்ய விரும்புபவர்கள் படிவம் 8-லும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

பொதுமக்கள் இந்த அரியவாய்ப்பினை நன்கு பயன்படுத்தி 100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலைத் தயார் செய்ய தங்களது முழுஒத்துழைப்பையும் அளிக்குமாறு தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி கேட்டுக்கொண்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.