Show all

‘2030-ம் ஆண்டில் நிலைக்கத்தக்க வளர்ச்சி’ என்னும் தலைப்பில் உச்சி மாநாடு.

ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் இந்திய வம்சாவளியினருமான சுந்தர் பிச்சை வீடியோ மூலம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையின் 70-வது கூட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்

‘2030-ம் ஆண்டில் நிலைக்கத்தக்க வளர்ச்சி’ என்னும் தலைப்பில் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 28-ந்தேதி ஐ.நா. சபையில் அமைதி பாதுகாப்பு குறித்த மாநாடும் நடக்கிறது. 2-வது மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஏற்பாடு செய்து இருக்கிறார். இதில் பான் கீ மூன், மோடி உள்ளிட்ட 193 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மோடி ஐ.நா. சபையில் நாளை(வௌ;ளிக்கிழமை) உரையாற்றுகிறார்.

ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, கூகுள் நிறுவனத்தின் சி. இ.ஓ.,வும் இந்திய வம்சாவளியினருமான சுந்தர் பிச்சை வீடியோ மூலம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது யூடியூப்பில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவில் சுந்தர் பிச்சை,

கூகுள் நிறுவனத்திற்கு உங்களை வரவேற்கிறோம். சான் ஜோசில் உங்களின் கருத்துக்களைக் கேட்க ஆர்வமாக இருக்கிறோம்.திறமையான தொழில்நுட்ப நிறுவனங்களை ஏற்றுமதி செய்த பெருமை இந்தியாவிற்கு உண்டு. ஐ.ஐ.டி. உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பட்டதாரிகள் உலகம் முழுவதிலும் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட உதவிகரமாக உள்ளனர். இருப்பினும் இந்தியா தனக்கு தானே பரிணாம வளர்ச்சி பெற்றுக் கொள்கிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.