Show all

அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்

அன்புமணியின் மைத்துனரும் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான விஷ்ணு பிரசாத்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கி ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில்,

     நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கிழமை இதழுக்கு பேட்டியளித்த,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகனும்,

முன்னாள் நடுவண் அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாசின் மைத்துனரும்,

சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்,

காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் கருத்துக்களை கூறியிருக்கிறார்.

     இந்தப் பேட்டியின் மூலம் தமிழக காங்கிரசின் தேர்தல் அணுகுமுறைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறுகளை பரப்புகிற நோக்கத்தில் வெளிப்படையாக கருத்துகள் கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதுகிறோம்.

     எனவே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவரோடு காங்கிரஸ் கட்சியினர் எவரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறர் இளங்கோவன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.