Show all

இந்தியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்தியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஓடும் அனைத்து ஆறுகளின் நீர்மட்டத்தையும் பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இயலும்.

 

நாடு முழுவதும் உள்ள ஆறுகளின் நீர்மட்டத்தை அறிய உதவும் இந்த வௌ;ள அபாய எச்சரிக்கை மூலம், ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டுவதை அறிந்து முன்கூட்டியே அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

 

இந்திய வெள்ள முன்னறிவுப்பு மையத்துடன் இணைந்து கூகுள் செயல்படுத்த உள்ள இந்தச் சேவையின் மூலம் நாட்டில் 170 இடங்களில் ஓடும் ஆற்றின் நீர்மட்டம் குறித்து உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

 

மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தால் கண்காணிக்கப்படும் இந்த நிலவரங்களை இனி கூகுள் மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.

 

கூகுள் நௌ கார்ட்ஸ், கூகுள் மேப்ஸ், கூகுள் பப்ளிக் அலர்ட்ஸ் ஆகியவற்றில் இந்த சேவை கிடைக்கும்.

 

பேரிடரின் போது, உரிய நேரத்தில் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி சென்றடைய வேண்டியதுதான் மிகவும் அவசியமானது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூகுள் உற்பத்தி மேலாளர் பாயல் பட்டேல் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.