Show all

விஜய் அரசாங்கமா (சர்கார்) அதிமுக அரசாங்கமா! போட்டா போட்டி

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் நடித்த சர்கார் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களில் ஒன்று 'இலவசம் வேண்டாம்' என்பது. இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு சாட்டையடியாக அரசு கொடுத்த இலவசப் பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சி ஒன்று இந்த படத்தில் உள்ளது. 

உண்மையில் அதிமுக வழங்கிய மின்விசிறி, மின்ஆட்டுக்கல் மின்அம்மிக்கல் எல்லாம் தீயிட்டு எரிக்கப் படவில்லையே தவிர தொன்னூறு விழுக்காடு இலவசப் பொருட்கள் குப்பைக்கு வந்து விட்டன. அத்தனையும் கொஞ்சமும் தரமில்லாத பொருட்கள்.

இதனாலேயே அரசு கொடுத்த இலவசப் பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சி ஆளும் அதிமுக அரசை மிகவும் பாதிக்கிறது. அதிமுக ஆட்சியாளர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்தக் காட்சியை நீக்க படக்குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்சியை நீக்குவதன் மூலம் இந்த கருத்தையே படக்குழுவினர் திரும்பப்பெற பெற்றுக் கொள்வதாகத்தான் எண்ண தோன்றுகிறது. வியாபர ரீதியாக எடுக்கப்படும் ஒரு படத்தில் பரபரப்புக்காக சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்து அந்த காட்சியின் மூலம் இலவச விளம்பரம் தேடிக்கொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த காட்சியை பிரச்சனை வந்தால் நீக்கவும் சம்மதம் தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

உண்மையாகவே மக்களின் விழிப்புணர்ச்சிக்காக அந்த குறிப்பிட்ட காட்சியை வைத்திருந்தால் காட்சியை நீக்க முடியாது என்று கூறி நியாயம் தேடி உச்ச அறங்கூற்றுமன்றம் செல்லலாமே? என்று பேசிக் கொள்ளப் படுகிறது. மொத்தத்தில் அதிமுகவின் அரசாங்கத்திற்கு விஜய்யின் அரசாங்கம் (சர்கார்) பணிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,966. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.