Show all

நேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் தொடர் அதிரடி

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை ஜவகர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் இன்று சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்பொழுது அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்களும் உடன் இருந்தனர்.

 

புதுடெல்லியின் துக்ளக் சாலையில் அமைந்துள்ள ராகுலின் வீட்டில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது.  கன்னையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டபொழுது அவருக்கு முழு ஆதரவு தந்தவர் ராகுல் காந்தி.  அதனுடன், கடந்த பிப்ரவரி 9ந்தேதி பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கன்னையா கைது செய்யப்பட்டார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் நடந்த கண்டன கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.  அதனுடன் ஜவகர்லால் நேரு பல்கலை கழக மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த நடுவண் அரசையும் தாக்கிப் பேசினார். 

ஐதராபாத் பல்கலை கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் நண்பர்களை நாளை சந்திக்க கன்னையா திட்டமிட்டுள்ளார்.

 

கடந்த ஜனவரியில் ரோகித் வெமுலா தற்கொலை செய்ததை அடுத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது.  இதனை தொடர்ந்து ஐதராபாத் பல்கலை கழக வளாகத்தில் வெமுலாவுக்கு நினைவகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.  அங்கு மாணவர்களை கன்னையா நாளை சந்திக்க உள்ளார்.  இந்நிலையில், ராகுல் காந்தியை கன்னையா இன்று சந்தித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.