Show all

வைகோ காட்டில் மழை: தேர்தல் வெற்றி மழையிலும் மக்கள் நனைப்பார்களா

 

     

     மக்கள் நலக்கூட்டணியைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா பயப்படுகிறார் என்று மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.

இது குறித்து மதுரையில் செய்தியாளரிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக உடன்பாடு அறிவிப்பு வெளியானதால் 1967ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பலமான கூட்டணி ஏற்பட்டுள்ளது. முதன் முதலாக கூட்டணி ஆட்சி என்பதை அறிவித்தது மக்கள் நலக்கூட்டணி தான்.

மது இல்லாத, ஊழல் இல்லாத தமிழகம்தான் மக்களின் விருப்பம். எங்கு பார்த்தாலும் திமுக, அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் மக்கள் உள்ளனர்.

மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக கூட்டணி அறிவிப்பு வெளியான உடனே சரத்குமாரை அழைத்து ஜெயலலிதா பேசியுள்ளார். திமுக மீது ஜெயலலிதாவுக்கு பயமில்லை.

மக்கள் நலக்கூட்டணி-தே.மு.தி.க. கூட்டணியை பார்த்துத்தான் ஜெயலலிதா பயப்படுகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தால் அதிமுகவில் என்ன நடக்கும் என்பதை நான் கூற விரும்பவில்லை.

2 ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் பயனடைந்த பலர் விசாரிக்கப்படாமல் உள்ளனர்.

2 ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட சாகித் பால்வா என்பவர் மு.க.ஸ்டாலினை ஏற்கனவே சந்தித்துள்ளார். இதன்மூலம் பலகோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தெரிந்த ஒரே நபரான சாதிக் பாட்ஷா இந்த தகவல் வெளியே தெரிந்தவுடன் இறந்தார். எனவே, சாதிக் பாட்ஷா இறப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.