Show all

டிராபிக் ராமசாமி மீது பாய்கிறது குற்றவியல் அவதூறு வழக்கு

பொது நல வழக்குகள் பல தாக்கல் செய்பவர் டிராபிக் ராமசாமி. இவர், கடந்த வாரம் முதல் அமைச்சருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக பேசிய வீடியோ காட்சி, வாட்ஸ் அப்பில் பரவியது.

சென்னையில் மழை வௌ;ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை, அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் மிரட்டுவதாகவும், அந்த நிவாரண பொருட்களைப் பறித்து தாங்கள், மக்களுக்கு வழங்குவதாகவும் தனக்கு தகவல் வந்துள்ளதாக கூறி, முதல் அமைச்சரை டிராபிக் ராமசாமி திட்டுகிறார்.

இந்த வீடியோ காட்சி இணையதளத்திலும், வாட்ஸ் அப்பிலும் வெளியானது. இதையடுத்து டிராபிக் ராமசாமி மீது ஜெயலலிதா சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 17-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்தது.

இதையடுத்து சென்னை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில், முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் குற்றவியல் அவதூறு வழக்கை இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் பேசிய டிராபிக் ராமசாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.