Show all

இந்த ஆண்டு சித்திரைமாத சிறப்பு மழை பொய்காது! தமிழகத்தில் பல பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு: வெதர்மேன்

ஐப்பசி மாதம் அடைமழை கார்த்திகை மாதம் கனமழை சித்திரை மாதம் சிறப்பு மழை என்று தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. சித்திரை மாதத்து சிறப்பு மழைக்கான வாய்ப்பு உண்டு இந்த ஆண்டு, என்கிற அந்த நல்ல செய்தியை சொல்லிவிட்டார் தமிழ்நாடு வெதர்மேன்.  
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் தற்போது மிக கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்கிறது. சென்னையில் வெயில் மாலை வரை மிக மோசமாக வாட்டி வருகிறது.
சித்திரை கடைசி ஏழு நாளும், வைகாசி முதல் ஏழு நாளும் வரவிருக்கிற கத்திரி வெயில் குறித்து மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
பெரும்பாலும் சித்திரை மாதத்தில் ஒரு சிறப்பு மழை பெய்து அந்தக் கத்திரி வெயிலைத் தணிப்பது தமிழக இயற்கையின் மரபு. கொஞ்ச காலமாக நாம் மரங்களை அதிகமாக அழித்;து, மழைக்கு எதிரியான வானளாவிய கான்கிரீட் கட்டிடங்கள், பிரம்மாண்ட தார், மற்றும் கான்கிரீட் சாலைகளை அமைத்து, மழைவாய்ப்புகளைக் குறைத்து வருகிறோம். 
இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறார். அதன்படி தமிழகத்தில் பல பகுதிகளில் இந்தக் கிழமை நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார். 
ஆனாலும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விருதுநகர், நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மழை பெய்யும். இந்தக் கிழமை இந்த பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும். ஆனால் சென்னையில் இந்த வாரமும் வெயில் அடிக்கவே வாய்ப்பு இருக்கிறது. என்று வெதர்மேன் கூறி இருக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,123.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.