Show all

சென்னைக்கு இனி கனமழை வாய்ப்பு இல்லை என ரமணன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையே மூழ்கும் அளவுக்கு கனமழை பெய்ய போகிறது என ஜோதிடங்கள் சொல்கின்றன எனவே சென்னையில் இருப்பவர்கள் வெளியேறுமாறு வட்ஸ்-ஆப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரு தகவல் பரவி வந்தது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்கள் கேட்ட கேள்வியில் இதை முற்றிலும் மறுத்துள்ளார். இந்த தகவல்கள் உண்மை இல்லை 7 ஆம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யும் என்றும், பின்னர் படிப்படியாக மழை குறையும் என்று தான் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

கனமழை, பெருவெள்ளம் , புயல் போன்ற தவறான தகவல்களை யாரும் நம்பவேண்டாம், இவை உண்மையில்லை என ரமணன் கூறினார்.

குமரிக் கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மட்டுமே கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மேகக்கூட்டங்கள் கிழக்கில் இருந்து சென்னையை நோக்கி வருவதால், அப்பப்போது மழை பெய்யும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது மட்டுமே மழை அதிகமாக பெய்யுமே தவிர, சென்னைக்கு கனமழை வாய்ப்பு இல்லை என ரமணன் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.