Show all

உடனடியாக செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்று உண்டு! தமிழ் வளர்ச்சித் துறையும், செம்மொழி உயராய்வு மையமும் இணைந்து.

‘தமிழ் வளர்ச்சித் துறை’ தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசாலும் ‘செம்மொழி உயராய்வு மையம்’ தமிழ் வளர்ச்சிக்காக நடுவண் அரசாலும் அமைக்கப் பட்ட நிறுவனங்கள். உடனடியாக செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றை இந்த இரு நிறுவனங்கள் தமிழக நலன் சார்ந்து முன்னெடுக்க வேண்டும்.

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘தமிழ் வளர்ச்சித் துறை’ தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கென தனி இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.

‘தமிழ் வளர்ச்சித் துறை’ தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை
1.தமிழ் வளர்ச்சி இயக்ககம்
2.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
3.தமிழ்ப் பல்கலைக்கழகம்
4.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
5.அறிவியல் தமிழ் மன்றம்
6.தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு
7.உலகத் தமிழ்ச் சங்கம்
8.தலைமைச் செயலக மொழிபெயர்ப்புப் பிரிவு. என்னும் எண்பேராயங்கள் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் அல்லது செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (ஊநவெசயட ஐளெவவைரவந ழக ஊடயளளiஉயட வுயஅடை) என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்ட மையமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. 

இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது. இந்த மையத்தின் வழியாக தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஜனவரி 21 2009 அன்று தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10ன் கீழ் (1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27) பதிவு செய்யப்பட்டது. ஆட்சிக்குழு, கல்விக்குழு, நிதிக்குழு, உயர்நிலைக்குழு, தலைவர், துணைத் தலைவர், செயலர், அலுவல்சார் உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி நிறுவனமாகும்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிறுவனத்தின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்த ஐம்பெருங்குழு, எண் பேராயம் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருப்பவர்களே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கின்றனர்.

தற்போது தமிழகத்தில் இயங்கி வரும், நடுவண் அரசுப் பணிகளிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணியாற்றும் பிறமாநிலப் பணியாளர்கள் தமிழ் தெரியாமலே தடுமாறி வருகின்றார்கள். இவர்கள் தமிழகத்தில் பணியாற்ற தமிழைக் கற்றுக்கொள்ள முயலாத நிலையில், தென்னக தொடர்வண்டித் துறையில் இரண்டு தொடர்வண்டிகள் நேருக்கு நேராக மோதும் மிகப்பெரிய விபத்து நடந்திருக்கக் கூடும். நல்;லவேளையாக அந்த அவலம் தடுக்கப் பட்டது.

நடுவண் அரசுப் பணிகளில் ஈடுபடும் பிற மாநிலத்தவர்களுக்கு ஹிந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் வேலையை, அவர்கள் எந்த மாநிலத்தில் பணியாற்றினாலும், காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி இன்றைய பாஜக ஆட்சி வரை செவ்வனே செய்து வருகிறது. 

நடக்கவிருந்து தவிர்கப் பட்ட தொடர்வண்டி விபத்து நமக்கு உணர்த்துவது: அந்தந்த மாநிலங்களில் பணியாற்றும் நடுவண் அரசுப் பணியாளர்களுக்கும், கார்ப்பரேட் பணியாளர்களும் அந்தந்த மாநில மொழியைப் பேசக் கற்றுக் கொள்வது கட்டாயம் என்பதாகும். 

நமது தமிழகத்தில் தமிழே தெரியாமலும், தெரிந்து கொள்ள முயலாமலும், பல்லாயிரவர் நடுவண் அரசுப் பணிகளிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் முயற்சியை தமிழக அரசும், நடுவண் அரசும் இந்த இருவேறு அமைப்புகள் மூலமாக உடனடியாக முன்னெடுக்க வேண்டும். தமிழக நலன் கருதி முன்னெடுக்குமா? மாநில, மற்றும் நடுவண் அரசுகள்.   

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.