Show all

மீண்டுமான இந்த ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு ---------- எடப்பாடி அரசே காரணம்! கோடிட்ட இடத்தில், குற்றப்படுத்தும் எந்தச் சொல்லும் பொருந்துகிறது

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வைகோ, ஸ்டாலின், மற்ற மற்ற கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுனர்கள் என்று அனைத்து தரப்பினரும் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக ஸ்டெர்லைட்டை மூட- எடப்பாடி அரசு மேற்கொண்டிருக்கிற உப்பு சப்பு இல்லாத ஆணை நிற்காது ; ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டியதைக் கொள்கை முடிவாக அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். 

இதை கொஞ்சமும் மதிக்காமல், உப்பு சப்பு இல்லாத ஆணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால்,  ஹஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருக்கிறது!

மீண்டுமான இந்த ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு ---------- எடப்பாடி அரசே காரணம் என்று கோடிட்ட இடத்தில், பொறுப்பற்ற, அடிமைத்தனமான, தான்தோன்றித்தனமான, அறிவற்ற, மூளையில்லாத, கள்ளத்தனமான, ஊழல்சார்ந்த, கேவலமான, மக்கள் உயிர்த் தியாகத்தை மதிக்காத, என்று தவறுக்கு முழு முதல் காரணம் எடப்பாடி அரசே என்ற எந்த வகையான சொல்லைப் போட்டாலும் அது பொருந்திப் போகும். 

ஸ்டெர்லைட் பிரச்னை தொடங்கிய இடத்துக்கே வந்திருப்பதாக மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். 

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன் நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசின் மெத்தனப்போக்கே ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரக் காரணம் என பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்திருப்பதாகக் கூறிய கமல், ஆலையைத் திறப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அரசு, உச்ச அறங்கூற்றுமன்றமெல்லாம் சென்று நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற மிருதுவான நடவடிக்கைகள் போதாது. மக்களைக் காக்கவேண்டும் என்று வரும்போது அழுத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.