Show all

அரசிற்கு கிடைத்திருக்கிற சாராயக் கடை நடத்தும் வாய்ப்பே! நாட்டின் அனைத்துக் குற்றங்களின் அடிப்படை

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு தனிமனிதனின் பாதுகாப்பிற்காக குடும்பம் என்ற ஒன்றை தமிழ்ச் சமூகம் கட்டமைத்து, பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாக போற்றிக் கொண்டாடி வருகிறது. 

அந்தக் குடும்பங்களின் பாதுகாப்பிற்காக பாண்டியர், சோழர், சேரர் என்று வலிமையான மனிதர்கள் அரசமைக்க முயன்ற போது தமிழ்க் குடும்பங்கள் அங்கிகரித்தன.

முதலாவதாக அந்த அரசுகள் கையில் எடுத்தது தமிழ்! அந்தப் பாண்டியர், சோழர், சேரர் அரசுகள் தமிழ்ச் சங்கம் அமைத்து- 

மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக தமிழைக் வளமான வலிமையான கருவி ஆக்கிய புலவர் பெருமக்களை சான்றோர் என போற்றிக் கொண்டாடின.  

அடுத்து மக்களின் பொதுப் புழக்கத்திற்கான கோயில், குளங்கள், ஆறுகளுக்கு கரை கட்டுதல், வாய்கால் பிரித்தல்  ஆகியவற்றை மேற்கொண்டனர். சோழன் கரிகாலன் ஒருபடி மேலே சென்று காவிரியின் குறுக்கே கல்லணை கட்டினார். பழந்தமிழகத்தில்: தனிமனிதரும் குடும்பமும் ஒன்றையொன்று போற்றி பாதுகாத்து வந்தன.

பழந்தமிழகத்தில்: தனிமனிதர் மற்றும் குடும்பமும், அரசும் ஒன்றையொன்று போற்றி பாதுகாத்து வந்தன என்பதும் செவ்வையாக நடந்து வந்தது.

இன்றைய தனிமனிதன் மற்றும் குடும்பங்கள் தன் கடமையிலிருந்து விலகாமல்: தங்கள் சொந்த உழைப்பில், சொந்த வருமானத்தில், அரசுக்கு வரி கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. 

இன்றைய அரசு: இலாபகரமான தொழிலையும் நடத்திக் கொண்டு, மக்களிடம் வரியும் பெற்றுக் கொண்டு - 

மக்களின் ஒழுக்கத்திற்கும், நல்வாழ்வுக்கும், சிந்தனை தெளிவிற்கும். சான்றாண்மைக்கும், பெற்றோர் தம் பிள்ளைகளை சான்றோர்களாக வளர்த்தெடுக்கிற கடமைப் பாட்டிற்கும் ஆண்கள் தடுமாற்றம் இல்லாமல் தொழில் புரிய வேண்டிய பாங்கிற்கும், சமூகத்தில் நிலவ வேண்டிய ஒருவனுக்கு ஓருத்தி, அகவொழுக்கம் ஆகிய தமிழ்ப் பண்பாட்டிற்கும் சாவுமணி அடிக்கும் சாராய வணிகத்தை மோற்கொள்வதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

அரசுக்கு தொழில் செய்வதோடு, மக்களிடம் வரிவாங்குவதோடு, சாராயகடையும் நடத்தி வருமானம் கொழிக்கும் வாய்ப்பு இருப்பதால்தான் எல்லோரும் ஆட்சிக்கு வர ஆசைப் படுகிறார்கள். 

சென்னையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், சாராயம், போதைஊசி முதன்மை பங்கு வகிப்பதை யாரும் மறுக்க முடியாது.

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய சம்பவம் மக்கள் நடுவே அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த குற்றச் சம்பவத்திற்கு மற்றொரு காரணம் 

அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கூட தெரிந்து கொள்ள முடியாத வாழ்க்கையை பலர் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சமூக நெருக்கடி. 

என்னதான் சமூக நெருக்கடி இருந்தாலும் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியம். குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவதாலும், அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதாலும் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். 

எதிர்கால நம்பிக்கையை குழந்தைகள் மீது வைத்து செயல்படும் பெற்றோர், அவர்களை சார்ந்து இயங்குவோரையும் கண்காணிக்க வேண்டும். குற்றவாளிகள் உருவாக சந்தர்ப்பத்தை தராமல் அவர்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

நம்முடைய கடமைகளை எளிமையாக்க: அந்தக் காலத்தில் குடும்பங்களின் பாதுகாப்பிற்காக பாண்டியர், சோழர், சேரர் என்று வலிமையான மனிதர்கள் அரசமைக்க முயன்ற போது தமிழ்க் குடும்பங்கள் அங்கிகரித்தது போன்று 

சமூக அக்கறையுள்ள வலிமையான மனிதர்களை ஆட்சிக்கு அமர்த்தி சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டியது தமிழ்க் குடும்பங்களின் தலையாய பொறுப்பாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,855.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.