Show all

அன்புமணி மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு.

முறைகேடாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய வழக்கில், பாமக அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ,க்கு டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 2008-2009 ம் ஆண்டுகளில் உ.பி,யின் இந்தூர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரி கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக அன்புமணி, கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 2012ம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு விசாரணை டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை இன்று நீதிபதி அஜய்குமார் ஜெயின் விசாரித்தார். அப்போது, போதிய ஆசிரியர்கள் , உள்கட்டமைப்புக்கள் இல்லாத நிலையில் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, அன்புமணி மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும் 5 பேரை குற்றச்சாட்டு பதிவதில் இருந்து விடுவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.