Show all

சீனா-பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கி உள்ளது இந்தியா.

எல்லைத் தாண்டுதல், பயங்கரவாதம், ஊடுருவல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சீனா-பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கி உள்ளது இந்தியா.

நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான்,சீனா எல்லை பகுதிகளில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

சம்பா பகுதியில் இந்திய-திபெத்திய எல்லை போலீஸ் படை முகாமில் உணவு விடுதியையும் அவர் திறந்து வைத்தார்.

பின்னர் அதன் அருகில் உள்ள இந்திய நிலைகளுக்கு சென்று பார்வையிட்டார்.எல்லை போலீஸ் படை முகாமை திறந்து வைத்து பேசிய ராஜ்நாத் சிங்,

இந்தியாவுடன் நல்ல நட்புறவு நீடிக்க அனைத்து அண்டைய நாடுகளும் எல்லைத் தாண்டுதல்,ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறினார். மேலும் இந்தியா அனைத்து அண்டைய நாடுகளுடன் நட்புறவு வைத்துக்கொள்ளவே விரும்புகிறது என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகளின் நடவடிக்கை, தொடர்ந்து எல்லையில் அத்துமீறிய தாக்குதல் தொடர்பாக இந்தியா கவலையும் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நல்ல நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடனான நட்புறவானது வளர்ச்சி அடையும் வரையில் ஆசிய கண்டத்தில் வளர்ச்சியும்,அமைதியும் நிலவாது என்று கூறினார்.

மேலும், எல்லைப் பிரச்சனை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று நான் உணர்கின்றேன். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. நாங்கள் எங்களுடைய எல்லையை பாதுகாக்கவே விரும்புகிறோம் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேலும்,இந்தியா-பாகிஸ்தானுக்கான உறவில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.