Show all

கலைஞருக்கு இரங்கற்பா இயற்றிய பெண்காவலர் செல்வராணி! நேரில் சந்தித்து பராட்டி ஸ்டாலின் பெருமிதம்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வராணி, அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர். பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார். 

கலைஞரின் இலக்கியங்கள் மீது பற்றுகொண்ட அவர் கலைஞரின் மறைவுக்கு இரங்கற்பா எழுதி காணொளியாக பதிவு செய்து அண்மையில் வெளியிட்டார். அது சமூகவலைதளங்களில் தீயானது.

இதனையறிந்த திருச்சி மாவட்ட காவல்துறை செல்வராணியை நுண்ணறிவு பிரிவில் இருந்து நடுவண் மண்டல காவல்துறைக்கு மற்றியது. கலைஞருக்கு இரங்கற்பா இயற்றிய ஒரே காரணத்திற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத செல்வராணி, அவரது பணியை வேண்டாமென்று விலகி விட்டார்.

திருச்சி ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு, திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காவலர் செல்வராணி குறித்த தகவல் அறிந்து நேற்று இரவு 10 மணிக்கு அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.