Show all

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம்! வாக்குறுதியை ராகுல் செயல்படுத்துவாரேயானால், இந்திய வரலாற்றில் மைல்கல்லே

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசில் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற உழவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

இந்த விழாவில் பயனாளிகள் சிலருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார். மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளது. அது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நடுவண்அரசில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் என்பதே அந்த முடிவு. இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. 

உலகில் எந்த ஒரு அரசும் செய்யாத இந்த திட்டத்தை நாங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,046.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.