Show all

அரசின் ரூ.2000 நிதி திட்டம் நிறுத்திவைப்பு

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசின் சிறப்பு நிதி ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரூ.2 ஆயிரம் வழங்குவது சரியல்ல. இதனை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது.

அரசு தரப்பில் அணியமான வழக்கறிஞர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில் சிறப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்கள் பலர் தங்களின் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் இருப்பதால், நாங்கள் இது தொடர்பான வழங்குதல் மற்றும் தகுதியானவர்கள் கணக்கெடுப்பு பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.