Show all

தமிழர்க்குப் பெருமிதமே! தமிழகத்தில் ஆயிரமாய் சிலைகண்ட கருணாநிதி அவர்களுக்கு நாளை சிலை திறப்பு

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிற்பம், சிலை, கோயில், இதிலெல்லாம் உலகில் முதன்மையான இனம் என்றால் தமிழினம் மட்டுமே. உலகினரின் தெளிவான வடிவமைப்பு கொண்ட சிலைகள் எல்லாம் பிற்காலத்தியவை; அதாவது தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு வடிவமைக்கப் பட்டவை. 

நடுகல்லுக்கு அடுத்த நிலையான, தமிழர் சிற்பம், சிலை, கோயில்களோ காலத்தால் முந்தியவை; வடிவமைப்பில் நுட்பமானவை. சிலை கடத்தல் என்பதெல்லாம் கூட, தமிழக சிலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல விலை இருப்பது தான் காரணம். 

உலகில் மிகப் பெரிய ஒரு வேடிக்கை: இந்த சிலை, சிற்பம், கோயில் என்பதில் இந்தியக் கோயில்களை யெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஆரியர்களுக்கு ஒரு 'குட்டி எலி சிலை' செய்த வரலாறோ பெருமையோ கூட இல்லை என்பதுதான். 

இந்திய விடுதலைக்குப் பிறகு ஒட்டு மொத்த இந்தியாவில், சான்றோர் சிலைகள், தலைவர்களுக்கு சிலை என்கிற பழக்கத்தை கொண்டு வந்தவர்கள் திமுகவினரே. சென்னைக் கடற்கரையில் சான்றோர்களுக்கு சிலைகள், தமிழகம் முழுவதும் திருவள்ளுவருக்கு சிலைகள், அண்ணா மறைவிற்குப் பிறகு தமிழகம் முழுவதும் அண்ணாவிற்கு சிலைகள், பும்புகாரில் பத்தினிக் கோட்டம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலை என்று விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் தமிழக சிலை வரலாற்றில் நிற்கிறது திமுக.

அந்த வழிவழியாக நாளை தமிழகத்தில் ஆயிரமாய் சிலைகண்ட கருணாநிதி அவர்களுக்கு சிலை திறப்பு விழா நடத்தப் படுவது பெருமையே.

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.