Show all

தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு எந்த வகையிலும் பாதிக்காது

தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு எந்த வகையிலும் பாதிக்காது என நடிகை வரலெட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இதுகுறித்து, வாக்களித்து விட்டு வந்த நடிகை வரலெட்சுமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, என் அப்பா சரத்குமாருக்கே நான் வாக்களித்தேன். நண்பராக எப்போதும் விஷாலுக்கு என் ஆதரவு உண்டு. எனது நட்பு அவருடன் தொடரும், தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு எந்த வகையிலும் பாதிக்காது. நடிகர் சங்கத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று  அவர் தெரிவித்தார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.