Show all

அடிச்ச ஆப்புலே அலன்டு போய் சுவிஸ் வங்கிலே போட்ட பணம் அபேஸ்

சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 75-வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் இந்தப் பட்டியலில் இந்தியா 61வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.

 

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தின் அளவு கடந்த ஆண்டு 33 சதவீதம் குறைந்து 8,392 கோடி ரூபாயாக உள்ளது. சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி, பஹாமாஸ், பிரான்ஸ், குயெர்ன்சி, லக்ஸம்பெர்க் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

 

ரஷ்யா 17- வது இடத்திலும், சீனா 28-வது இடத்திலும், பிரேசில் 37-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் 69-வது இடத்தில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.