Show all

மயில்சிலை மாற்றிய வழக்கு! அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

சென்னை, மயிலாப்பூர் கபாலிசுவரர் கோவிலில், புன்னை வனநாதர் சிற்றிலில், பழமையான மயில் சிலை இருந்தது. இது மாற்றப்பட்டு, புதிய சிலை வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள், வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து திருமகள் பிணை கேட்டு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

தொடர்ந்து, மயில் சிலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட, திருமகளிடம் விசாரணை நடத்த, வியாசர்பாடியில் உள்ள, அவரது வீட்டிற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சென்ற போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. அவரை கைது செய்ய காவலர்கள் தீவிரம் காட்டி வந்தனர். 

இந்நிலையில், திருமகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் சென்னையில் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், கும்பகோணத்தில் உள்ள சிறப்பு அறங்கூற்றுமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,003.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.