Show all

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உத்தரவிடும் அளவிற்கு பசுமை தீர்ப்பாயம் அவ்வளவு வலிமை மிக்க அமைப்பா:சீமான்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீமான் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மூடப்பட்ட ஆலையைத் திறக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உத்தரவிடும் அளவிற்கு பசுமைத் தீர்ப்பாயம் அவ்வளவு வலிமை மிக்க அமைப்பா? மக்களின் எதிர்கால வாழ்விற்கு அக்கறை காட்டாமல் 3 கிழமைக்குள் ஆலையைத் திறக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கூறுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் தாமிரம் இந்தியாவிற்கு வழங்கப்படுகிறதா அல்லது மற்ற நாடுகளுக்கு வழங்கப்படுகிறதா? தாமிரத்துக்கு அவ்வளவு தட்டுபாடு என்றால் குஜராத்தில் ஆலையை  திறக்க வேண்டியதானே?

தூமிரத் தட்டுபாட்டை பற்றிப் பேசுபவர்கள் இரண்டு ஆண்டுகளில் தூத்துக்குடி நிலத்தில் ஒரு சொட்டு நீர்கூட இருக்காது என்று கூறுவதைப் பற்றி சிந்திக்காதது ஏன்? நீரை சேமிக்க என்ன திட்டம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார் சீமான்.

பசுமை தீர்ப்பாயம் என்கிற அமைப்பு பசுமைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான அமைப்பு மட்டுமே. ஸ்டெர்லைட் பசுமை தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் பசுமைக்கு எதிரானதில்லை என்று நிரூபித்து அதற்கான தடையில்லாச் சான்றிதழ் பெற முடியும். அவ்வளவுதான்.

ஸ்டெர்லைட் ஆலையை நடத்த வேண்டும் என்று சொல்வதற்கு பசுமை தீர்ப்பாயத்திற்கு எந்தச் சட்ட உரிமையும் இல்;லை. அதுவும் மூன்று கிழமைகளுக்குள் என்று கால எல்லை நிர்ணயிக்கிற அதிகாரம் எல்லாம் பசுமைத்தீர்ப்பாயத்திற்கு எழாது. ஏனென்றால் ஸ்டெர்லைட் மூடப் படுவதால் பசுமைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஸ்டெர்லைட் மூடப்பட்டால் பசுமைக்கு ஏதாவது பாதிப்பு என்றால் வேண்டுமானால் பசுமைத்தீர்ப்பாயத்திற்கு உரிமை இருக்கிறது. ஸ்டெர்லைட் பசுமை சம்பந்தப் பட்டது இல்லை என்பதால், பசுமைக்கு எதிரானதில்லை என்று சொல்வதைத் தவிர அதற்கு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை. 

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பசுமைத்தீர்ப்பாய அனுமதியை காரணம் காட்டியதுதான் கொடுமை. அது கொடுமையான சப்பை காரணம் என்பதை எதிர்கட்சிகளும் சட்ட வல்லுனர்களும் முன்பே தெரிவித்து விட்டனர்.

எடப்பாடி அரசின் ஆணை இதுதான்: 'ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனை புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஏற்கெனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆலை இயங்கவில்லை. 24.5.2018 அன்று முதல், ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் என்னையும், துணை முதல்வரையும், மூத்த அமைச்சர்களையும், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து, ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளும், தமிழ்நாடு அரசால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அரசு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது' என முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் அனுமதியின்மையை காரணம் காட்டி தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை. என்று சொல்வதற்கு மட்டுந்தாம் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு உரிமை இருக்கிறது. 

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை எடப்பாடி அரசு துணிச்சலாக எங்களுக்கு தாமிர அலை தேவையில்லை என்று தெளிவாக சட்டம் போடலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.