Show all

காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கம் ஐ.என்.டி.யூ.சி அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர் ஐ.என்.டி.யூ.சி-இன் தலைவர் காளன் தலைமையிலான தொழிற்சங்கத்தினர்.

ஜெயலலிதாவைச் சந்தித்து ஆதரவு அளித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட இளங்கோவன் போட்டியிட வாய்ப்பு தரவில்லை, வாரிசுகளுக்கும் பணம் கொடுத்தவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியுள்ளது என குற்றம் சாட்டிய அவர்கள், இதனால் தாங்கள் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.