Show all

தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஒன்னும் பாஜக ஆட்சிக்கு வரவில்லை! எச்.இராஜா

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று கோவையில் செய்தியாளர்களை எச்.ராஜா சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள், 'புயலால் பாதிக்கப்பட்ட கழிமுக மாவட்டங்களை இந்தியத் தலைமை அமைச்சராக இருக்கும் மோடி ஏன் பார்வையிட வரவில்லை' என்று கேட்டனர். 

அதற்கு எச்.ராஜா, சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவை ஏன் கூப்பிட வேண்டும் என்று கேள்வி கேட்டு, காங்கிரசையும், ஸ்டாலினையும் திட்டத் தொடங்கி விட்டார். 

உடனே செய்தியாளர்கள் குறுக்கிட்டு, 'சரி.. காங்கிரஸ் சரியில்லை என்றுதானே பாஜகவுக்கு மக்கள் ஓட்டுபோட்டார்கள், அப்படி இருக்கும்போது இப்போது மக்களே பாஜகவை குறை சொல்கிறார்களே, உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்' என்றனர். 

உடனே எச்.ராஜா, 'தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஒன்னும் பாஜக ஆட்சிக்கு வரவில்லை' என்றார். 

தமிழகத்தில் பாஜகவுக்கு எத்தனை பேர் ஓட்டு போட்டார்களோ அவர்களுக்கு மட்டுமாவது வங்கிக் கணக்கில் ரூ15இலட்சம் போடலாமே என்று தமிழக மக்கள் கேட்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,006.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.