Show all

மதுராந்தகம் ஏரி முழுவதும் நிரம்பியதால் 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுராந்தகம் ஏரி முழுவதும் நிரம்பியதால் ஏரிக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனார், 80 கிராமங்களுக்கு   வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மதுராந்தகம் ஏரி 23.3 அடி கொள்ளளவு கொண்டது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இந்த ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால்,  வினாடிக்கு 8000க்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர்  வெளியேறி வருகின்றது.

இந்தத் தண்ணிர் 80 கிராமங்கள் வழியாக செல்லவேண்டியிருக்கும் என்பதால் அந்தக் கிராமங்களுக்கு   வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உபகரனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையை அடுத்துள்ள ஆவடியில் அமைந்துள்ள கவரப்பாளையம் ஏரி உடைந்ததால்   வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.