Show all

உலகின் எந்த நாடும் தமிழகத்தையே இந்தியாவின் முகமாக பார்க்கும்! மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்கு மாமல்லபுரம் தேர்வின் பின்னணி

உலகின் பழமையான எந்த நாட்டிற்கும் இந்தியா என்றதும் நினைவுக்கு வருவது தமிழகமே என்பது தமிழர் தம் வரலாற்றுப் பெருமையை உலகம் அறிந்திருப்பதன் அடிப்படையாகும். அந்த வகையில் சீன அதிபர் மோடியை சந்திக்க விரும்பியது தமிழகத்தின் மாமல்லபுரத்திலாம்.

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா மற்றும் சீனாவின் இருநாட்டு உறவு குறித்து இன்று தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் தலைமைஅமைச்சர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இதனையடுத்து, இரு நாட்கள் இங்கு தங்கியிருந்து மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப்பார்க்கவுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்தியா சீனா உறவு குறித்த உரையாடலுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார் என்ற பெரிய வினா மக்கள் நடுவே எழுந்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாக தற்போது தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதாவது, மாமல்லபுரத்தில் மோடி, ஜின்பிங் சந்திப்பு இந்திய அரசால் முடிவு செய்யப்பட்டது என பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். உண்மையில் இந்த சந்திப்பை மாமல்லபுரத்தில் நடத்த முடிவெடுத்தது சீன அரசுதான்.

சீனாவின் வெளியுறவுத்துற அமைச்சராக உள்ள லுவா ஸாகுவிதான் தமிழகத்தின் மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளார். லுவா ஸாகுவி இந்தியாவுக்கான முன்னாள் சீன தூதராக இருந்தவர்.

இவர், சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான பண்டையகால வணிகத் தொடர்பு குறித்து அறிந்து வைத்துள்ளார். ஆகையால் இந்திய-சீன உறவு குறித்து ஆலோசனை நடத்த ஏதுவான இடமாக மாமல்லபுரம் அமையும் என லுவா ஸாகுவி கூறியதன் பேரில் சீன அரசு மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,302.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.