Show all

புலி, கிருமி படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என்று அரசு ஆணை.

விஜய் நடித்துள்ள புலி மற்றும் கிருமி படங்களுக்கு  வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. யூ சான்றிதழ் பெற்ற படங்கள் என்றாலும் சில காட்சிகள் வரிவிலக்கு அளிக்க உகந்ததாக இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புலி படம் தொடர்பாக தேர்வுக்குழு பார்வையிட்டு கீழ்க்கண்ட குறைகளைச் சொல்லியுள்ளது.

1. மூடநம்பிக்கைகளை உண்மையாகக் காட்டப்படும் காட்சிகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.

2. படத்தில் வன்முறைக் காட்சிகள் உள்ளன.

3. பாடல் காட்சிகளில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன.

4. மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை.

இதுபோன்ற காரணங்களால் புலி படம் வரிவிலக்குக்குத் தகுதியானது அல்ல என்று 6 பேர் கொண்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான கிருமி படத்துக்கும் வரிச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறை அதிகம் உள்ளதால் வரிவிலக்கு அளிக்க இயலாது என்று படத்தைப் பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.

இதனால் புலி, கிருமி படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என்று  அரசு ஆணையிட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.