Show all

இன்று வெளியானது அஜித்தின் விசுவாசம்! திரையிலும், தமிழ்ராக்கர்சிலும்

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜித்-சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விசுவாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு கதைத்தலைவியாக நயன்தாரா நடித்துள்ளார்.  

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

இன்று வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.  

இந்தப் படம் குடும்பத்தின் தேவையைப் பேசும் படமாக அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.  

விசுவாசம் வெளியான முதல் நாளன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது கீச்சுப் பக்க பதிவில், இணையத்தில் படம் வெளியானால் அதற்கான இணைப்பை claim@blockxpiracy.comஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கூறி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.  

படத்தை திரையரங்கில் கண்டுகளிக்குமாறு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது கீச்சு பக்க பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,028.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.