Show all

நடிகர் என்பதால் சல்மான்கானுக்கு ஜாமின் என்ற பெயரில் சலுகை காட்டக் கூடாது.

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு எதிராக தொடர்ந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான்கான், 2002-ல் பந்த்ரா பகுதியில் போதையில் வாகனம் ஓட்டியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். செஷன்ஸ் கோர்ட் அவருக்கு கடந்த மே மாதம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மும்பை நீதிமன்றம் அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து, மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என யஷ்வந்த் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

நடிகர் என்பதால் சல்மான்கானுக்கு ஜாமின் என்ற பெயரில் சலுகை காட்டக் கூடாது எனவும் மும்பை நீதிமன்றம் வழங்கிய அவரது ஜாமினை ரத்து செய்ய கோரியும் பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி வழக்கை தள்ளுபடி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.