Show all

தமிழக அரசு திறனற்றது; அது நேராக ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசு! கமலின் கருத்துக்கு 80விழுக்காடு ஆதரவு

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு திறனற்றது. அது நேராக ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசு என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.

ஒரு நாளேடு இந்தக் கருத்துக்கு தமிழ் மக்களின் நாடித்துடிப்பு எவ்வாறானது என்று அறிய இயங்கலையில் ஒரு கருத்துக் கணி;ப்பை நடத்தியது. அந்தக் கருத்துக் கணிப்பில் எண்பது விழுக்காடு மக்கள் கமலின் இந்தக்  கருத்தை ஆதரித்து தமிழக அரசின் மீது தங்களுக்கு இருக்கிற வெறுப்;பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கமலின் கருத்து ஏற்புடையது என்று 80 விழுக்காட்டு பேர்களும், ஏற்புடையதல்ல என்று 6 விழுக்காட்டு பேர்களும், வழக்கமான அரசியல் என்று 14 விழுக்காட்டு பேர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,057.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.