Show all

ஐந்து குழந்தைகள் பெற்றால் ரூ 2 லட்ச ரூபாய் பரிசு

ஐந்து குழந்தைகள் பெற்ற ஒவ்வொரு இந்து மத குடும்பத்தினருக்கும் தலா ரூ 2 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று சிவசேனா  கட்சி அறிவித்துள்ளது.

இந்த வித்தியாசமான அறிவிப்பை சிவசேனா கட்சியின் ஆக்ரா மாவட்ட பிரிவு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்ட ஆக்ரா மாவட்ட சிவசேனா தலைவர் வீணு லாவானியா, இந்து மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் சரிந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், இந்த பரிசுத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தின் மூலம் 2010-2015 ஆம் ஆண்டு கால கட்டத்தில் 5 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த இந்து குடும்பத்தினருக்கு ரூ 2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்த பரிசுத்தொகையை பெற இந்து சமூக குடும்பத்தினர் நகராட்சி நிர்வாகம் வழங்கிய பிறப்பு சான்றிதழை காண்பிக்க வேண்டும என்று தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு மத அடிப்படையிலான  மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதில் இந்துக்கள் வளர்ச்சி விகிதம் சரிந்திருந்த வேளையிலும் முஸ்லீம் மக்களின் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருந்ததற்கு சிவசேனா கட்சியின் தலமை கவலை தெரிவித்தது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று சிவசேனா தலைமை அறிவுறுத்திய நிலையில், அக்கட்சியின் ஆக்ரா பிரிவு பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.