Show all

சோ ராமசாமி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி, கவலைக்கிடமாக உள்ளார். மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ ராமசாமி கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி சோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவும் சோவிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில் இன்று அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். டாக்டர்கள் அவரைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரான சோ, பத்திரிகையாளர் மட்டுமல்லாது சினிமாவிலும் ஜொலித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களின் படத்தில் காமெடி ரோலில் நடித்து மக்களைச் சிரிக்க வைத்துள்ளார். மேலும், முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.