Show all

வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டம்.

வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவும், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவும் வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

இது குறித்து தமாக தலைவர் ஜி.கே.வாசன்,

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமையை மீட்டுத் தரவேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகளை வழங்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா தொடர்ந்து போராடி வருகிறது.

இந்தக் கோரிக்கைகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நடுவண், மாநில அரசுகளை வலியுறுத்தி

வரும் 26-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே எனது தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தமாகா நிர்வாகிகள், தொண்டர்களோடு பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.